லண்டன் : பிரிட்டனில் உள்ள நியூ கேஸில் பல்கலையில் கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளதா என கண்டறியும் சோதனை கிட்டை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
கொரோனா வைசின் தாக்கம் உலகின் பல நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. கொரோவை கட்டுப்படுத்த பல நாடுகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மற்றொருபுறம் கொரோவை முழுவதுமாக அழிக்க தடுப்பு மருந்து கண்டறியும் சோதனைகளில் பல நாடுகளிலும் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அமெரிக்கா போன்ற நாடுகளில் சோதனை தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் பிரிட்டனில் உள்ள நியூ கேஸில் பல்கலைகழக விஞ்ஞானிள் கொரோனா சோதனை தொடர்பான கிட் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.
அதன்படி, இந்த பரிசோதனை கிட் மூலம், கொரோனா பாதித்த நோயாளியின் உடலில் அவருக்கு அறிகுறி தென்படும் முன்னரே கொரோனா உள்ளதா இல்லையா எனஎளிதாக கண்டறிய முடியும். இதனால் நோயாளியின் உடலில் நோய்தொற்றை ஏற்படுத்தும் உயிரிகளை பரிசோதித்து சில வினாடிகளில் முடிவைத் தெரிந்துகொள்ளலாம் என்று கூறப்படுகிறது. மேலும் நியோப்டெரின் எனப்படும் ஒரு நோய்த்தொற்று மூலம் கொரோனா பாதிப்பு கண்டறிய முடியாவிட்டாலும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துள்ளதா இல்லையா என துல்லியமாக கண்டறியலாம் என மருத்துவர்கள் தரப்பில் கூறுகின்றனர். இது கொரோனா நோயாளிகளுக்கு ஒரு முழுமுதல் எச்சரிக்கையாக விளங்கும் என சன்டே டெலிகிராஃப் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இதுவரை பிரிட்டனில் 4313 கொரோனா நோயாளிகள் மரணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 708 பேர் மரணம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பேராசிரியர் காலின் செல்ப், இந்த புதிய கொரோனா பரிசோதனையை 'பெல்ட் அண்ட் பிரேசஸ்' என்றழைக்கிறார். இந்த சோதனை பிரிட்டனில் கொரோனா தாக்கம் குறைய வழிவகுக்கும் என்றுள்ளார். மிகவிரைவில் கொரோனா தாக்கத்தை நோயாளிகள் அறிவதன் மூலமாக சிகிச்சை துரிதப்படுத்தப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. கொரோனா தடுப்பு மருந்துக்கான கண்டுபிடிப்பு இன்னும் சோதனை அளவிலேயே உள்ளது. இந்நிலையில் இந்த விரைவு சோதனை பிரிட்டன் மக்களுக்கு சற்று ஆறுதலாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.