புதுடில்லி: கொரோனாவின் சமூக பரவல் குறித்து 'ரேண்டம்' சோதனை போதாது; விரிவான திட்டங்கள் வேண்டும்' என, உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலில், இந்தியா இரண்டாம் நிலை பாதிப்பில் உள்ளது. அதாவது, வைரஸ் தொற்றுக்கு ஆளானவரிடம் இருந்து நேரடியாக மற்றவருக்கு பரவுவது, இரண்டாம் நிலை பாதிப்பாக கருதப்படுகிறது. இந்த பாதிப்பு, சமூக பரவலாக மாறியுள்ளதா என்பதை கண்டறிய, 'ரேண்டம்' எனப்படும், அங்கொன்றும் இங்கொன்றுமாக 1,000 நபர்களிடம் பரிசோதனை நடத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
சமூக பரவல் உள்ளதா? 'ரேண்டம்' சோதனை போதாது