புதுடில்லி: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக டிக்கெட் முன்பதிவு குறைந்ததால், நாடு முழுவதும் 168 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. நாளை (மார்ச் 20) முதல் 31 ம் தேதி வரை ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.
இந்தியாவில் கொரோனா பரவி வருகிறது. இதனால், பொது மக்கள் தேவையற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என மத்திய அரசு எச்சரித்துள்ளது. கொரோனா பாதிப்பு உள்ள மாநிலங்களுக்கு செல்வதை தவிர்க்கும்படி தமிழக அரசும் வலியுறுத்தியுள்ளது. இதனால், பொது மக்கள் ஏராளமானோர் திட்டமிட்ட பயணங்களை ரத்து செய்துள்ளனர். இதற்காக டிக்கெட் முன்பதிவு செய்வதையும் ரத்து செய்து வருகின்றனர். வெளியிடங்களுக்கு செல்வதையும் குறைத்துள்ளனர். இதனால், ரயில்களில் போதுமான முன்பதிவு இல்லை