தொட்டில் குழந்தை பதால்திட்டத்தின் மூலம் நிறைய குழந்தைகள் காப்பாற்றப்பட்டிருப் சிசுக்கொலை குறைந்துள்ளது என்று நாம் கூறலாம் ஆனால் பெண் குழந்தைகள் கருவில் கொல்லப்படுவது அதிகரித்துள்ளது," என்றே நாம் கூற வேண்டும் என்கிறார் ஆண்ட்ரு.
"2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் 1000 ஆண்களுக்கு 995 பெண்கள் (Adult Sex Ratio) என்று இருந்தது. ஆனால் குழந்தை பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 970ஆக (Child Sex Ratio) மட்டுமே உள்ளது.
தொட்டில் குழந்தை திட்டத்தால் குழந்தைகள் கொல்லப்பட்டது தடுக்கப்பட்டுள்ளது என்பதை பெரியர்வர்களுக்கான பாலின விகிதம் காட்டுகிறது; ஆனால் அதுவே 1000 ஆண்களுக்கு 970ஆக இருக்கும் குழந்தை பாலின விகிதம் 2005 -2011க்கான காலங்களில் அதிக கருக்கொலைகள் நடந்துள்ளது என்பதன் தாக்கமே என்கிறார்," ஆண்ட்ரூ.